Saturday, 15 September 2012

நானும் ரஜினி ரசிகன்தான்- சிவகார்த்திகேயன் I am also rajini fan says sivakarthikeyan

ரஜினி ரசிகர்கள் என்று சொல்லிக்கொண்டு சினிமாவிற்குள் வந்த சில நடிகர்கள் அவரை மாதிரியே நடிக்க முயற்சித்து எடுபடாமல் ரூட்டை மாற்றிக்கொண்டார்கள். இன்னும் சிலர், அவரது படங்களை ரீமேக் செய்து நடிப்பது. அவரது படத்தலைப்புகளை தனது படங்களுக்கு வைத்துக்கொள்வதுமாக கோலிவுட்டில் வண்டியோட்டி வருகிறார்கள்.

இந்த பட்டியலில் மெரினா பட நாயகனான சிவகார்த்திகேயனும் சேர்ந்துள்ளார். நான் சிறுவயதில் இருந்தே ரஜினியின் தீவிர ரசிகன். ராஜா சின்ன ரோஜா படத்தில் ஒரு பாடல் காட்சியில் பல காஸ்டியூம்ஸ் அணிந்து அவர் நடனமாடியிருப்பார். அதைப்பார்த்து, நானும் அந்த பாட்டை கேட்டபடி ஒவ்வொரு டிரஸ்சாக மாற்றியடி நடமாடுவேன். அதனால் எனது வீட்டில் இருப்பவர்கள் என்னை சின்ன ரஜினி என்றே அழைப்பார்கள். ஆக நான் ரஜினி சார் படங்களைப்பார்த்துதான் நடிப்பு கற்றுக்கொண்டேன்.

அதற்காக, அவரை மாதிரி நடிக்க வேண்டும் என்று நான் முயற்சித்ததில்லை. அது முடியாது என்பதால், எனக்கென்று ஒரு பாணியை ஏற்படுத்த முயற்சித்து வருகிறேன் என்று சொல்லும் சிவகார்த்திகேயன், ரஜினி படத்தில் ஒரு சிறிய வேடத்தில் முகம் காட்ட வாய்ப்பு கிடைத்தாலும் அதை பெரும் பாக்கியமாக கருதி நடிப்பேன் என்கிறார்.