இசையமைப்பாளர் விஜய் ஆண்டணி தயாரித்து, இசையமைத்து, ஹீரோவாக நடிக்கும் படம் ’நான்’.இந்த படத்தின் இசைவெளியீட்டு விழாவை பரத்வாஜ், கங்கை அமரன், ஷங்கர் கணேஷ், சுந்தர்.சி பாபு, தேவி ஸ்ரீ பிரசாத் என இசைக்குடும்பமே வந்து வாழ்த்தியது.
நான் படத்தில் விஜய் ஆண்டணிக்கு ஜோடியாக மூன்று ஹீரோயின்கள் நடிக்கின்றனர். மூவரில் நடிகை ரூபா தான் மெயின் கதாநாயகி. படத்தை பற்றி பேசிய போது விஜய் ஆண்டணி “ ஹீரோயின்கள் மூலமா எந்த பிரச்சினையும் இல்ல. அவங்க என்ன அண்ணா அண்ணானு கூப்பிடுறது தான் கஷ்டமா இருக்கு. ஏன் அப்படி கூப்பிடுறாங்கனு தெரியல.
என்ன எந்த விதத்துல டெவலப் பண்ணிக்கணும்னு கேட்டாலும் அப்புடி தான் கூப்பிடுறாங்க. அதனால கெமிஸ்ட்ரி ஒத்துப்போகல. என்னை என் அம்மா தான் கஷ்டப்பட்டு இசையமைப்பாளரா உயர்த்துனாங்க. என் மனைவி என்னை நடிகனா உயர்த்தியிருக்காங்க. அவங்க என் மேல உயிரையும் வெச்சிருக்காங்க” என்று கூறினார்.
ஒரு பத்திரிக்கையாளர் மனைவி மேல இவ்ளோ பாசம் வெச்சிகிட்டு கெமிஸ்ட்ரிக்கு அலையறீங்களே சார்?” என்று கேட்டதற்கு விஜய் ஆண்டணி
“ என்ன சார் பண்றது. என்ன நெனச்சா எனக்கே வருத்தமா இருக்கு” என பதிலளித்தார்.