இரு யூத் நடிகர்களின் படத்தில் நடித்துவிட்டு, இனி நல்ல கதையம்சம் உள்ள படங்களை தேடிக் கண்டுபிடித்து நடிப்பேன் வரும் படங்களையெல்லாம் பார்க்க மாட்டேன் என அறிக்கை விட்டுவிட்டு சில மாதங்கள் வீட்டிலேயே இருந்தவர் தான் நடிகை ரிச்சா.
தற்போது கௌதம் மேனனின் தமிழ்செல்வனும் தனியார் அஞ்சலும், வெங்கட் பிரபுவின் ‘பிரியாணி’ படங்களில் புக் ஆகியிருக்கும் ரிச்சா, கௌதம் மேனன் தயாரிக்கும் தமிழ்செல்வனும் தனியார் அஞ்சலும் படத்தை விட பிரியாணி படத்தைத் தான் அதிகம் நம்பி இருக்கிறார். தனது பவர்ஃபுல்(!) கம்-பேக் பற்றி பேசிய ரிச்சா ”ஒஸ்தி, மயக்கம் என்ன படங்களில் நடித்துக் கொண்டிருந்த போது மங்காத்தா படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தது.
சில காரணங்களால் அதில் நடிக்க முடியாமல் போனது. அதன்பிறகு நல்ல வாய்ப்பிற்காக காத்திருந்த எனக்கு பிரியாணி படத்தில் நடிக்க வாய்ப்பு வந்ததும் உடனடியாக எனது சம்மதத்தை தெரிவித்தேன். சமீப காலமாக யூத் ஹீரோக்கள் நன்றாக நடிக்கின்றனர்.
அதில் கார்த்தி முதலிடத்தில் இருக்கிறார். கார்த்தியுடன் ஜோடி சேர்வது மகிழ்ச்சியாக உள்ளது. பிரியாணி படத்தில் வழக்கமான வெங்கட்பிரபுபின் படங்களைப் போல் ஹீரோவுக்கு முக்கியத்துவம் இல்லை ஹீரோயினுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.
எனக்கு சூர்யாவுடன் இணைந்து நடிப்பதிலும் ஆர்வம் இருக்கிறது” என்று கூறியுள்ளார்.