ஒரு காலத்தில் நக்கல், நையாண்டி பொருளாக வர்ணிக்கப்பட்ட பவர் ஸ்டார் நடிகருக்கு, தற்போது உண்மையிலேயே பவர் கூடியிருக்கிறது. பெரிய இயக்குனர்களின் படங்களில் வாய்ப்பு கிடைத்து நடித்து வருகிறார்.
இந்நிலையில் தான் சொந்தமாக தயாரிக்கும் படமொன்றிற்கு இவர் பாட்டு பாடியிருக்கிறாராம். இந்த பாடலை ‘கொலவெறி’ பாடல் போல் மிகவும் பிரபலமாக்க இணையதளத்தில் வெளியிடவும் முடிவு செய்துள்ளாராம். பவர் ஸ்டாருக்குத்தான் இணையதளத்தில் ஏகப்பட்ட ரசிகர்கள் இருக்கிறார்களே? அதை வைத்து மிகவும் பிரபலமாகிவிடலாம் எனும் எண்ணத்தில் இத்திட்டத்தை கையிலெடுத்திருப்பதாக கூறப்படுகிறது.