தமிழ் சினிமாவில் ஹோம்லியாக தனது நடிப்பை துவங்கும் நடிகைகளுக்கு, அடுத்து வரும் வாய்ப்புகளும் ஹோம்லியாகவே கிடைக்கிறது. அவர்களுக்கு கவர்ச்சி வராது என்று நினைப்பார்களோ என்னவோ? அதன்பின் நடிகைகளே தாங்கள் கவர்ச்சிக்கு தயார் என்று சொன்னவுடன் அவர்களை படங்களில் புக் செய்ய குவிந்து விடுவார்கள்.
அந்த வரிசையில் சுப்பிரமணியபுரத்திலிருந்து வந்த வாதி நடிகைக்கு முதல் படமே பெரிய கை கொடுத்தாலும், அதன்பின் அவருக்கு வாய்ப்புகள் சரிவர வரவில்லை. முதல் இயக்குனரின் படத்திலேயே மறுபடியும் நடிக்க வாய்ப்பு கிடைத்ததே தவிர, வேறு இயக்குனர்கள் அவரை கண்டுகொள்ளவில்லை. இதனால் வேறு வழியில்லாமல் கிளாமர் நடிகைகள் வரிசையில் தன்னையும் இணைத்துக் கொண்டதுடன், கோலிவுட்டுக்கு தூதும் விட்டிருக்கிறாராம்.
இதன்பிறகாவது தமிழ் சினிமாவில் ஒரு ரவுண்டு வரலாம் என்ற கனவில் மிதந்து வருகிறாராம் நடிகை.