கலைஞரின் கண்ணம்மா பட இயக்குனர் எஸ்.எஸ்.பாபா விக்ரம் இயக்கத்தில் கருனாஸ், பாபிலோனா, வி.எஸ்.ராகவன்,நாசர் நடிக்கும் படம் ‘பொம்மை நாய்கள்’. பகலில் பொம்மைகளாக இருக்கும் பொம்மை நாய்கள் இரவில் ஆக்ஷன் ஹீரோவாக மாறி வில்லன்களை பழி வாங்குகின்றன.
பொம்மை நாய்களை ஆக்ஷன் ஹீரோக்களாக மாறும் சக்தியை உருவாக்கும் விஞ்ஞானியாக வி.எஸ்.ராகவன் நடித்துள்ளார். நடிகை பாபிலோனா கவர்ச்சி மட்டும் காட்டி நடிக்காமல் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.சமீபத்தில் மறைந்த பாடகி சொர்ணலதா இந்த படத்தில்
”பட்டுச்சேலை தேவையில்லை மாமா
ஒரு பவுன் நகையும் தேவையில்லை மாமா
மஞ்சத்தாலி ஒண்ணுபோதும் மாமா”
என்ற பாடலை பாடியுள்ளார். அவர் பாடிய கடைசி பாடல் இது தான். இந்த பாடலை ஏ.வி.எம் ஸ்டூடியோவில் மிகப்பெரிய செட் போட்டு கருணாஸ், கோவை சரளாவுடன் 30 ஜோடி நிஜ குறவர்களை ஆட வைத்திருக்கிறார்களாம். பொம்மை நாய்கள் விரைவில் ஆக்ஷன் ஹீரோக்களாக களத்தில் இறங்குமாம்.
Kisu Kisu
Monday, 17 September 2012
சிறந்த படங்களை ஆஸ்காருக்கு தேர்ந்தெடுக்க 16 பேர் கொண்ட குழு
ஒவ்வொரு வருடமும் ரிலீஸாகும் சிறந்த படங்களை ஒவ்வொரு பிரிவுகளாக வகைப்படுத்தி அந்தந்த பிரிவில் சிறந்த படத்திற்கு ஆஸ்கார் விருது வழங்கப்படும்.
இந்திய மொழிப்படங்களை ஆஸ்கார் குழு ’சிறந்த அயல்நாட்டுத் திரைப்படம்(Best Foreign Film)’ என்ற பிரிவின் கீழ் வகைப்படுத்தி விருது வழங்கும்.
இந்த வருடம் வெளியான சிறந்த படங்களை ஆஸ்காருக்கு தேர்ந்தெடுக்க 16 பேர் கொண்ட குழுவை நியமித்துள்ளது ஆஸ்கார். இந்த வார இறுதியில் ஆஸ்காரின் குழு படங்களை பார்த்து தேர்வு செய்ய உள்ளது. அந்த வரிசையில் தமிழிலிருந்து ஏழாம் அறிவு, வழக்கு எண் 18/9 ஆகிய படங்கள் இருக்கின்றதாம்.
புதுமையான கதைகள் என ஆஸ்கார் குழுவினர் இந்த படங்களை பாராட்டியுள்ளனர். இந்திய அளவில் இந்தி படங்களான ‘தி டர்ட்டி பிக்சர்’, ‘கஹானி’, ‘கேங்ஸ் ஆஃப் வேசிபூர்’ ஆகிய படங்களும், தெலுங்கில் ‘ஈகா’ படமும் ஆஸ்கார் குழுவினரின் பார்வையில் இருக்கிறதாம்.

Labels:
kisu kisu
நடிகைக்கு கல்யாண ஆசையே மறந்து போயிருச்சாம்
மலையாளம், கன்னடம் என மாறி மாறி ரொம்ப பிஸியாக நடித்து வருகிறார் பாவனை நடிகை. இதனால் நடிகைக்கு கல்யாண ஆசையே மறந்து போயிருச்சாம். இவங்க வீட்லயும் ரொம்பவும் பிஸியா மாப்பிள்ளை தேடினவங்க இப்போ கப்சிப் ஆயிட்டாங்களாம். மார்க்கெட் போன பிறகு கல்யாணம் பண்ணுவது பற்றி யோசிக்கலாம். இப்போதைக்கு உன் கவனமெல்லாம் நடிப்புல மட்டும்தான் இருக்கணும்னு அவர் குடும்பமும் நடிகைக்கு யோசனை கூறி வருகின்றனராம்.
Labels:
kisu kisu
Subscribe to:
Posts (Atom)