Saturday, 8 September 2012

லிங்குசாமியை நக்கலடிக்கும் மிஷ்கின்?

இயக்குனர் மிஷ்கினின் மேடை பேச்சுகள் பொதுவாகவே திரையுலகத்தில் சர்ச்சையை கிளப்பும். மனதில் பட்டதை பளார் என்று சொல்லும் மிஷ்கினா இப்படி செய்தார்? என சலசலக்கிறது தமிழ்த் திரையுலகம். சமீபத்தில் மிஷ்கின் இயக்கிய முகமூடி படம் ரிலீஸாகி ‘தமிழில் முதல் சூப்பர் ஹீரோ’ படம் என்ற பெருமையுடன் திரையிடப்பட்டுவருகிறது.

மிஷ்கின் லிங்குசாமியை எப்படி நக்கலடித்தார் என்பதற்கு முன்பு முகமூடி பற்றி ஒரு பிளேஷ்பாக் ”முகமூடி முதலில் ஆர்யா நடிப்பில் லிங்குசாமி தயாரிப்பதாக இருந்தது. இந்த கூட்டணி இணையாமல் போனபிறகு சூர்யா, சிம்பு, விஷால் என பல நடிகர்களிடம் மிஷ்கின் கேட்டும் யாரும் நடிக்கவில்லை. மிஷ்கின் இயக்கிய அஞ்சாதே படத்தில் நடிக்க ஜீவாவிடம் கேட்ட போது ஜீவா மறுத்ததால் நரேன் அந்த கதாபாத்திரத்தில் நடித்தார்.



சில காரணங்களால் அஞ்சாதே படத்தில் இணையாத ஜீவா-மிஷ்கின் கூட்டணி முகமூடியில் இணைந்தது. ஆனால் லிங்குசாமி சில காரணங்களால் தயாரிப்பு பொறுப்பிலிருந்து சிரித்த முகத்துடன் தானே விலகிக்கொண்டார். இப்படி லிங்குசாமி திடீரென ஒப்புக்கொண்ட பொறுப்பிலிருந்து விலகியது தான் முகமூடி படத்தின் வில்லனான நரேன் கதாபாத்திரத்திற்கு ’அங்குசாமி’ என்று பெயர் வந்தது என்கிறது தமிழ் சினிமா இண்டஸ்ட்ரி.

அப்படிப் பார்த்தால் சூர்யாவையும் தான் கிண்டலடித்துள்ளார் என முகமூடி படத்தில் மாற்றுத்திறனாளியாக வரும் நபரை கைகாட்டுகிறார்கள். ஆனால் மிஷ்கினின் அனைத்துப் படங்களிலும் வித்தியாசமான மாற்றுத்திறனாளிகளை நடிக்க வைப்பது மிஷ்கினின் வழக்கம்.

லிங்குசாமி முகமூடி படத்தின் இசைவெளியீட்டு விழாவிற்கு சென்று சிறப்பித்ததும், சூர்யா முகமூடி படத்தின் முன்னோட்டம் வெளியிடும் விழாவிற்கு வந்து சிறப்பித்ததும் குறிப்பிடத்தக்கது.