தமிழில் கலக்கு கலக்குன்னு கலக்கிவிட்டு தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பிற மொழிகளில் நடித்து ஒரு ரவுண்டு வந்தார் நமீ நடிகை. அங்கு சென்ற இடைவெளியில் தமிழுக்கு புது புது கதாநாயகிகள் கிடைத்துவிட இவருக்கு வாய்ப்பில்லாமல் போயிற்று. இதற்கிடையில், டிவி ரியாலிட்டி ஷோக்களிலும், கடை திறப்பு விழாக்களிலும் கலந்து கொண்டு வந்தார். மும்பைக்கு போய் ரியல் எஸ்டேட் தொழிலும் செய்து வந்தார்.
தற்போது சினிமாவுக்கு ரீ என்ட்ரி கொடுக்க தயாராகி வருகிறாராம். இதற்காக விதவிதமான ஸ்டைலில் கலக்கலான கிளாமர் ஆல்பம் ஒன்றை தயார் செய்து தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குனர்களுக்கு மின்னஞ்சல் செய்து வாய்ப்பு தேடி வருகிறாராம்