Monday, 10 September 2012

விரல் வித்தை நடிகர் ஒரே சமயத்தில் 3???

விரல்வித்தை நடிகரும் கல் நடிகையும் நடிக்கும் இரண்டெழுத்தின் படவேலைகள் தற்போது பரபரப்பாக நடைபெற்று வருகின்றன. விரல் வித்தை நடிகர் ஒரே சமயத்தில் 3 படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் இந்த இரண்டெழுத்து படத்தை தீபாவளிக்கு ரீலீஸ் செய்ய முடிவெடுத்திருக்கிறாராம். இந்த படத்திற்கு முந்தைய படம் நடிகருக்கு எதிர்பார்த்த வெற்றியைத் தராததால் இப்படத்தை வெற்றிப்படமாக்க முயற்சித்து வருகிறாராம்.

இப்படத்தில் ஒப்பந்தமாகிய கல் நாயகிக்கும் நிறைய படவாய்ப்புகள் கையில் உள்ளதாம். எவ்வளவு பிசியாக இருந்தாலும் தன் படத்தில் வந்து நடித்து கொடுக்கவேண்டும் என விரல் வித்தை நடிகர் கண்டிஷன் போட்டிருப்பதால் நடிகை தற்போது கையை பிசைந்து வருகிறாராம். தேவையில்லாமல் மூக்கை நுழைத்துவிட்டோமோ என யோசிக்கிறாராம்.