Friday, 14 September 2012

தல உடனே ஓகே சொல்லிவிட்டாராம்- சிறுத்தை இயக்குனர் இயக்கவிருக்கிறாராம்


தல நடிகர் ஒரு படத்தை முடித்த பிறகுதான் அடுத்த படத்தில் நடிப்பது என்ற பிடிவாதத்தோடு நடித்துக் கொண்டிருந்தார். தற்போது அந்த பிடிவாதத்தை கொஞ்சம் தளர்த்திக் கொண்டுள்ளாராம்.

ஆம், டான் படத்தில் நடித்து முடித்த கையோடு, தலைப்பைக்கூட முடிவு செய்ய நேரமில்லாத படத்தில் நடிக்க புறப்பட்டு விட்டார். தற்போது அந்த படத்தில் நடித்துக் கொண்டிருக்கும்போதே நாகி தயாரிப்பாளரின் மகன்கள் மிகப்பெரிய பட்ஜெட்டில் எடுக்கும் படத்தில் நடிக்க முடிவு செய்திருக்கிறாராம்.

இதுகுறித்து, அவர்கள் தலயிடம் கேட்டபோது, எந்தவித தயக்கமும் காட்டாமல் உடனே ஓகே சொல்லிவிட்டாராம். இப்படத்தை சிறுத்தை இயக்குனர் இயக்கவிருக்கிறாராம்.