Monday, 10 September 2012

மூணுஷா ஹீரோயினும் ராண ஹீரோவுக்கும் இடையே???

நல்ல காலம் பொறக்குது...

மூணுஷா ஹீரோயினும் ராண ஹீரோவுக்கும் இடையே லவ்னு ஊரே பேச¤னாலும் அப்படி எதுவும் இல்லன்னு அம்மணி சொல்றாராம்... சொல்றாராம்... ஆனாலும் ரெண்டுபேரும் டெய்லி செல்போன்ல பேசறாங்களாம். அடிக்கடி பார்ட்டிக்கும் சேந்து போறாங்களாம். தமிழ்ல 3 படங்கள்ல நடிக்க¤ற மூணுஷா புதுபடம் எதுவும் ஒத்துக்கலையாம். பிப்ரவரி 2013ல ரெண்டு பேரும் மேரேஜ் பண்றதா பிளான் பண்ணியிருக்காங்கனு கோலிவுட்ல நெருக்கமானவங்க சொல்றாங்களாம்... சொல்றாங்களாம்...

கன்னட மாஜி சியெமை மணந்துவிட்டு மீண்டும் சினிமாவுக்கு வந்த ‘நேச்சர் பட ஹீரோயின் குட்டி ராதியோட சமீபத்திய சான்டல்வுட் படம் கைகொடுத்திருக்காம்... இருக்காம்... இதயடுத்து மறுபடியும் அதே ஹீரோவோட நடிக்க ஒப்பந்தம் ஆகி இருக்காராம். இதையடுத்து ஏற்கனவே நடிச்சி பாதில நின்னுபோன படங்கள மறுபடியும் தூசி தட்டி நடிக்கவும் முடிவு பண்ணிருக்காராம். டோலிவுட் கோடி ராம இயக்கத்தில் நின்னுபோன படத்துல அம்மணி நடிக்க ஒப்புக்கிட்டாராம்... ஒப்புக்கிட்டாராம்...

நயன நடிகை 2 வருஷத்துக்கப்பறம் மெரினா சிட்டில நடக்க¤ற ஷூட்டிங்ல நடிக்க¤றாராம்... நடிக்க¤றாராம்... தல நடிகரோட நடிச்சிட்டிருக்க¤ற நயனிடம் யாராவது பேச முற்பட்டா, ‘இது வேலை பாக்குற இடம். இந்த இடத்துல எந்த மேட்டரும் பேச விரும்பலனு சொல்லி சைலன்ட் ஆயிட்றாராம். நடிகைக்கு யாரை பார்த்தாலும் மீடியா ஆட்கள் மாதிரியே தெரியிறாங்களாம். அதனாலதான் இந்த மாதிரி நடிகை சொல்றாராம்... சொல்றாராம்...