Sunday, 16 September 2012

அமெரிக்காவில் மாடலிங் செய்பவர் சதா

ஹனுசினி கிரியேஷன்ஸ் சார்பில் ராஜேஷ்குமார் தயாரிக்கும் படம் மைதிலி இதில் நாயகனாக நவ்தீப், நாயகியாக சதா நடிக்கின்றனர். சுமன்ஷெட்டி, சுபாஷினி, பாண்டு, காதல் சரவணன் ஆகியோரும் நடிக்கின்றனர். இப்படத்துக்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி பி.சூரியராஜன் இயக்குகிறார்.

அமெரிக்காவில் மாடலிங் செய்பவர் சதா. சென்னையில் உள்ள அவரது சொத்துக்களை சமூக விரோதிகள் அபகரிக்கின்றனர். சென்னை திரும்பும் சதா நடந்ததை அறிந்து அதிர்ச்சியடைகிறார். விளம்பர பட இயக்குனர் நவ்தீப்பை அணுகி தனது சொத்துக்கள் பறிக்கப்பட்டதை சொல்லி அவற்றை மீட்க உதவி கேட்கிறார். சொத்துக்கள் மீட்கப்பட்டதா? என்பது கிளைமாக்ஸ்.

தெலுங்கிலும் இப்படம் மைத்ரி என்ற பெயரில் வெளியாகிறது. படப்பிடிப்பு முடிந்து விரைவில் ரிலீசாக உள்ளது. ஒளிப்பதிவு: ஜி.செல்வகுமார், பாடல்: சி.புண்ணியா, இசை: விகாஷ், முருகன், நடனம்: செந்தாமரை, அஜய், தயாரிப்பு மேற்பார்வை: வெங்கட், இணை தயாரிப்பு: குமார ராஜா.